1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (08:38 IST)

தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி: செய்தியாளர்களை சந்திக்க மறுத்ததால் பரபரப்பு

இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடிவு செய்திருப்பதால் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அவர் இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என எச்சரிக்கையும் அறிவுரையும் கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்த முடிவை இன்னும் விஜய் சேதுபதி எடுக்காமல் உள்ளார்
 
இந்த நிலையில் சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று விஜய் சேதுபதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவதை தவிர்த்ததோடு செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘800’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் விஜய் சேதுபதி தனது முடிவை அறிவிப்பார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன
 
அனேகமாக ‘800’ படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது