வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (20:57 IST)

’’மாஸ்டர்’’ படத்தில்….விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி பஞ்ச்...

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 
வரும் ஜனவரி 14  ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் 5 வது புரோமோ இன்று வெளியாகி வைரலானது. இதில் விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் டயலாக் இடம்பெற்றுள்ளது.

அதில், உலகத்தில எவனப் பாத்துனாலும் பயப்படலாம். ஆனா சாவ் நம்மல நெருங்கிடுச்சின்னா, எதிர்க்க ஒருக்க எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது எனப் பேசுவதுபோன்ற வீடியோ வைரலாகிறது.

இன்று விஜய்யின் மாஸ்டர் படம் பற்றி இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு கேரக்டர்களான ஜேடி மற்றும் பவானி நீண்ட நாட்கள் நாட்டில் பேசப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.