விஜய்யின் ’’மாஸ்டர்;’’ டிரெய்லர் ’’ ரிலீஸ்…முன்னணி நடிகர் வாழ்த்து

Sinoj| Last Updated: சனி, 9 ஜனவரி 2021 (19:09 IST)

விஜய்யின் மாஸ்டர் படத்தின்
3 வது புரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் ஹிந்தி டிரெயிலர் ரிலீஸாகியுள்ளது. இதுகுறித்து ஹிந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால் டுவீட் பதிவிட்டுள்ளார்.


விஜய் , விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்காத நிலையில் தியேட்டர்கள் திறப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரும் 11 ஆம் தேதி வரை 50% அனுமதியளி, 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறியுள்ளது.


இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.
#VijayTheMaster @THEOFFICIALB4U.

இந்நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் பட இந்தி டிரெயிலர் ரிலீஸாகியுள்ளது. இதுகுறித்து இந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால், எனது நண்பர் விஜய், நான் உங்களது மாஸ்டர் டிரெயிலரைப் பார்த்து மகிழ்தேன். இதைத் திரையில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி பெரிய திரையில் இந்தியில் காண வெயிட் பண்ணுகிறேன் என வாழ்த்தியுள்ளார். இவர் துப்பாக்கி படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஆவார்.

link hereஇதில் மேலும் படிக்கவும் :