மாஸ்டர் ரிலீஸ்: முதல் நாள் 900 திரைகளில்… அடுத்த நாளில் 600 திரைகளில் – ஏன் தெரியுமா?

Last Modified சனி, 9 ஜனவரி 2021 (10:30 IST)

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி 900 திரைகளில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த
திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாவதில் உறுதியாக உள்ளதால் வேறு வழியில்லாமல் அந்த படத்துக்கு சில திரையரங்குகளை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் ஜனவரி 13 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் ரிலீஸாகும் என்றும் அதற்கடுத்த நாள் ஈஸவரன் சுமார் 350 திரையரங்குகளில் ரிலீஸாகும் என்றும் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :