தூய தமிழில் விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில்!
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் திரைப்படங்கள் பெரும்பாலும் தூய தமிழில் வைக்கப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ’இடம் பொருள் ஏவல்’, ’மாமனிதன்’, ’கடைசி விவசாயி’, ’சங்கத்தமிழன்’ ’சீதக்காதி’ ’ஆண்டவன் கட்டளை’ ’காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை கூறலாம்
இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கும் தூயதமிழ் டைட்டில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, மேகாஆகாஷ் நடிப்பில் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹித் இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் விஜய் சேதுபதியின் 33 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.கணியன் பூங்குன்றனாரின் மறக்கமுடியாத தமிழ் வார்த்தைகள் இந்த டைட்டிலுக்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார்.