1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (09:38 IST)

யோகி பாபு வெறும் நகைச்சுவை நடிகர் இல்லை… தங்கர் பச்சான் கருத்து!

கருமேகங்கள் கலைகின்றன படத்தின் கலைஞர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன் மற்றும் அருவி அதிதி பாலன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதையடுத்து தங்கர் பச்சான் உள்ளிட்ட படக் கலைஞர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தங்கர் பச்சான் “ இந்த படத்தின் கதையை 2006 ஆம் ஆண்டு எழுதினேன். பல முறை முயற்சித்தும் படமாக்க முடியவில்லை. இந்த படத்தில் பாரதிராஜாதான் நடிக்கவேண்டும் என உறுதியாக இருந்தேன். யோகி பாபுவை அனைவரும் நகைச்சுவை நடிகர் என்று மட்டும் நினைக்கிறார்கள். அதை உடைக்கும் மாதிரியான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். கதையைக் கேட்டு உருகிவிட்டார். நிறைய நாட்கள் தேதிகள் கொடுத்து நடித்துள்ளார். இன்னும் 4 நாட்களில் மொத்த படமும் முடியவுள்ளது. மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.