வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (19:25 IST)

மிஷ்கினின் ’பிசாசு 2’ படத்தில் இணையும் விஜய்சேதுபதி: சிறப்பு தோற்றமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவற்றில் ஒரு சில படங்கள் சிறப்பு தோற்றங்களில் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் 'பிசாசு 2' திரைப்படத்திலும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்திற்காக அவர் ஐந்து நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும் சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் முக்கியமான கேரக்டர் என்றும் கதையில் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர் என்பதால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக விஜய் சேதுபதி தரப்பில் இருந்து கூறப்படுகிறது
 
மேலும் மிஷ்கின் மீது விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதால் அவரது படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று பல பேட்டிகளில் விஜய் சேதுபதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.