வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:59 IST)

வெற்றிமாறன் படம் ஷூட்டிங் நடப்பதில் சிக்கல்… இப்படி ஒரு சோதனையா?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் முதல் கட்டமாக நடந்து முடிந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி அதற்காக சில நாட்கள் நடித்தும் முடித்துக் கொடுத்துள்ளார். இந்த படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காடுகளின் உள்ளே அடர் வனப்பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. காடுகளின் உள்ளே படப்பிடிப்புகள் நடப்பதால் இரவில் தொழிலாளர்கள் கொசுத் தொல்லைக்கு கடுமையாக ஆளாகின்றனராம். இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வர மறுக்கிறார்களாம். இப்போது கூடுதல் சம்பளம் கொடுத்து தொழிலாளர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.