பவானி கதாபாத்திரத்தில் இவரா? நல்ல வேளை நடக்கலை!

Last Modified வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:40 IST)

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் மனதில் வைத்திருந்த நடிகர்களில் ஆர் கே சுரேஷும் ஒருவராம்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. சில விமர்சனங்களில் விஜய்யை விஜய் சேதுபதி தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் மனதில் வைத்திருந்த நடிகர்களில் தெலுங்கு நடிகர் நானியும், தமிழில் ஆர் கே சுரேஷும் இருந்தனராம். இதைக் கேட்ட ரசிகர்கள் நல்ல வேளை ஆர் கே சுரேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.




இதில் மேலும் படிக்கவும் :