உப்பேன்னா ரீமேக்கில் விஜய் மகனா? கோலிவுட்டில் பரவும் செய்தி!

Last Modified வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:49 IST)

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேனா திரைப்படம் ஆந்திராவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறதாம்.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவர் வில்லனாக நடித்த உப்பேனா என்ற திரைப்படம் ஆந்திராவில் இதுவரை 28 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். மேலும் ஒட்டுமொத்தமாக 60 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் நாயகனுக்கு இதுதான் முதல்படம். ஆந்திராவில் ஒரு அறிமுக நாயகனின் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைத்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய் நாயகனாக நடிக்க உளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை. ஒரு வேளை சஞ்சய் கதாநாயகனாக நடித்தால் விஜய் சேதுபதியே தமிழிலும் வில்லனாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :