வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (19:26 IST)

’கமல் 232’ படத்தில் விஜய்சேதுபதி வில்லனா?

’கமல் 232’ படத்தில் விஜய்சேதுபதி வில்லனா?
கமலஹாசன் நடிக்க இருக்கும் 232 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாகவும் விஜய் சேதுபதி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கிட்டத்தட்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது என்று கூறப்படுகிறது 
 
ஏற்கனவே தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார் என்பதும் அந்த படத்தை இயக்கியதும் லோகேஷ் கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் தேர்வு நடைபெறுவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் போது கோலிவுட் திரையுலகமே ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது