சாவி ஆண்டவன்கிட்ட இருக்கு! 'சங்கத்தமிழன்' டீசர் விமர்சனம்

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (10:58 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா மூவிஸ் தயாரித்து வரும் 'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இணையதளத்தில் டீசர் வெளியானது
அட்டகாசமான வெளிவந்துள்ள இந்த டீசரில் 'நான் உன்ன சாதாரணமா நினைச்சிகிட்டேன், நீ இவ்வளவு பெருசா வளர்ந்து என் முன்னாடியே இப்படி நிப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று வில்லன் கூற, அதற்கு விஜய் சேதுபதி 'ஒருத்தன் வரணும்ன்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வச்சுக்கோயான், நீ என்னதான் கேட்ட சாத்தி கேட்டை பூட்டு போட்டாலும் பூட்டு லாக் ஆகாது, ஏன் தெரியுமா? சாவி அவன்கிட்ட இருக்கு' என்ற விஜய் சேதுபதி அட்டகாசமான வசனமும் இந்த டீசரில் ஹைலைட்டாக காணப்படுகிறது. இந்த டீசருக்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் பெரும் வரவேற்ப்பை அளித்து வருவதால் டீசருக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நிவேதாபெத்துராஜ் நடிக்கும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர். இந்த படம் பார்க்க இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :