1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (20:05 IST)

பிகிலை தொடர்ந்து “தளபதி 64” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் பிகில் படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அவரது அடுத்தப்படத்திற்கான பணிகள் ஜரூராய் தொடங்கியுள்ளன.

எப்போதும் ஒரு படத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கும்போதே அதற்கான பெயரை அறிவிப்பதுதான் இயல்பு. ஆனால் விஜய் நடிக்கும் 63 வது படத்திற்கு அப்படி தலைப்பு எதுவும் வைக்காமலே படப்பிடிப்பு துவங்கி முடிந்தும் விட்டது. தலைப்பு என்ன என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் “பிகில்” என்று மாஸாக வெளிவந்தது பட தலைப்பு.

பிகில் படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில் படம் ரிலீசுக்கான இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் மாநகரம் பட இயக்குனர் லேகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை ரசிகர்கள் “தளபதி 64” என்று அழைத்தனர்.

இந்நிலையில் “தளபதி 64” படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லோகாஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷின் ஆஸ்தான எடிட்டர் பிலோமின் ராஜ் இதிலும் எடிட்டராக பணிபுரிகிறார். இந்த படம் 2020 கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாக இந்த படத்தை தயாரிக்கும் எக்ஸ்பி ஃப்லிம் கிரியேட்டர்ஸ் தெரிவித்துள்ளார்கள்.

இந்த படத்தில் விஜய் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.