தொடர்புடைய செய்திகள்
- மேம்பாலத்தை அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- வாய்க்கால்களின் திறந்து விடப்படும் நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
- பிக்பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் டிவி- பரபரப்பு தகவல்!
- சிரஞ்சீவியுடன் இணைந்த சூப்பர் ஸ்டார்ஸ் – சைரா படத்துக்கு டப்பிங் பேசும் ரஜினி !
- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில் கரூர் மாவட்டத்திற்கு அமராவதி நீர்!
இணையத்தில் லீக்கான "வெறித்தனம்" - அதிர்ச்சியில் பிகில் படக்குழுவினர்!
பிகில் படத்தின் "வெறித்தனம்" பாடல் இணையத்தில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு முன்பு ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
