அருண் ஜெட்லி & சுஷ்மா சுவராஜ் மரணம் பற்றி பேசிய உதயநிதி – இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (08:25 IST)

தேர்தல் பரப்புரையில் தான் பேசிய பேச்சுக்கு இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தாராபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரும் மோடியின் அழுத்தம் தாங்காமல்தான் இறந்துவிட்டதாக பேசினார். இது தனிமனித தாக்குதல் என்று கூறி பாஜகவின் சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு இன்று மாலை 5 மணிக்குள் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :