1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2021 (08:12 IST)

காத்ரினா கைப்புடன் நடிக்கும் விஜய் சேதுபதி… தேதிகளை ஒதுக்கி படப்பிடிப்புக்கு தயார்!

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் நாயகியாக காத்ரினா கைப் நடிக்கிறார். இப்போது ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்காக ஏப்ரல் மாதம் தேதி ஒதுக்கியுள்ளாராம்.