திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (17:03 IST)

விஜய் சேதுபதி பட நடிகை விவாகரத்து அறிவிப்பு...திரைத்துறையினர் அதிர்ச்சி

Niharika-Chaitanya
விஜய் சேதுபதி   நடிப்பில் வெளியான ’’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’’ என்ற படத்தில்  நடித்த பிரபல நடிகை நிஹாரிகா தன் கணவரிடம் இருந்து விவாகரத்தை அறிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இளம்  நடிகை நிஹாரிகா. இவர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாவுவின் மகள் ஆவார்.

இவர்  சினிமா மற்றும் சின்னத்திரை  நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தன் கணவரை பிரிந்து வாழ்த்து வந்த நிஹாரிகா , தற்போது தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாகவும் மீடியாக்களில் தகவல் வெளியானது.
Niharika-Chaitanya

இந்த நிலையில், நடிகை நிஹாரிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் கணவர் சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.