திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (14:41 IST)

''சினிமாவில் பாரபட்சம் ...தென்னிந்திய ரசிகர்கள் இதைப் பார்ப்பதில்லை''- நடிகை அவிகா கவுர்

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் பிரபல நடிகை அவிகா கவுர். இவர், தெலுங்கு சினிமாவில் உய்யல ஜம்பாலா என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு, இவர் தெலுங்கில் நடித்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை.  எனவே மும்பைக்கு குடிபெயர்ந்த அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார்.

தற்போது இந்திப் படங்களில் நடித்து வரும் அவர், தென்னிந்திய சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய சினிமாவில்தான் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்களை இந்தி ரசிகர்கள் பார்த்து ரசிக்கிறார்கள், ஆனால்,  இந்தி படங்களை தென்னிந்திய ரசிகர்கள் பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.