செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (15:04 IST)

நீங்களுமா ப்பா… விஜய் சேதுபதி ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள க பெ ரணசிங்கம் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

சமீபகாலமாக நடிகர்களை அரசியலுக்கு இழுக்கும் விதமாக ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்குப் பிறகு இப்போது அந்த வரிசையில் விஜய் சேதுபதியின் ரசிகர்களும் போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர். நேற்று அவர் நடிப்பில் உருவான க பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியானதை அடுத்து அரசியல் வசனங்கள் கொண்ட போஸ்டர்களை கள்ளக்குறிச்சி ரசிகர்கள் ஒட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.