சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி… சர்ப்ரைஸ் தகவல்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக. இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கு அசரீரி போல ஒரு குரல் கேட்டு, அவரை தூண்டும் விதமாக அமையுமாம். அந்த குரலால்தான் பயந்தவரான அவர் மாவீரனாக மாறுவாராம். அப்படிப்பட்ட அந்த குரலுக்கு டப்பிங் பேசியுள்ளாராம் விஜய் சேதுபதி. இதுபற்றிய தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.