1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (17:11 IST)

விஜய்சேதுபதி-லோகேஷ் இணையும் படம் ‘கைதி 2’ படமா?

மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் தாமதமாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது விக்ரம் படத்திற்கு முன்னதாக ஒரு படத்தை இயக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார்
 
இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த படம் கைதி படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கைதி படத்தின் முதல் பாகத்தில் நடித்த கார்த்தி தற்போது பிசியாக இருப்பதால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது