1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (18:57 IST)

எல்லா டான் படமும் ஒரே மாதிரி இருக்கனுமா என்ன? விஜய் சேதுபதி!

எல்லா டான் படமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
 
விஜய் சேதுபதி தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படம். ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களை இயக்கிய கோகுல், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
 
இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக  இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. 
 
இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை, சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது, இந்த சப்ஜெக்ட்டில்தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால், படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்.
 
இதில் பஞ்ச் இருக்கா? இல்லையா? என்று என்னிடம் கேட்பதைவிட, அதை ரசிகர்கள்தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம். ஜுங்கா என்றால் என்ன? என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப்பற்றி விரிவாகச் சொல்ல முடியாது” என்றார்.