1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (18:55 IST)

யோகிபாபுவைப் புகழ்ந்த விஜய் சேதுபதி

தன்னுடன் நடித்த காமெடி நடிகர் யோகிபாபுவைப் புகழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கோகுல். விஜய் சேதுபதி இதுவரை நடித்ததிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம். எனவே, விஜய் சேதுபதியே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சயீஷா, மடோனா செபாஸ்டியன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் நண்பனாக யோகிபாபு நடித்துள்ளார். ‘நீ டான், நான் அசிஸ்டண்ட் டான்’ என டிரெய்லரில்  யோகிபாபு சொல்லும்போது பயங்கர காமெடியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது யோகிபாபு பற்றி விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  “அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட பேவரைட். எந்தச் சூழலாக இருந்தாலும், அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக்  கொண்டிருக்கிறார்” என்று புகழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி.