வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (12:02 IST)

மீண்டும் டிரெண்டாகும் விஜய் செல்ஃபி!

டுவிட்டரில்  #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 

 
நெய்வேலி படப்பிடிப்பின் போது அங்கு படப்பிடிப்பு நடத்த கூடாது என மாஸ்டர் படப்பிடிப்பை எதிர்த்து பாஜகவினர் போராடியதை அறிந்து ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்தனர். தனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்தார். அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். 
 
தற்போது அந்த செல்பி எடுத்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில்  #1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். கடந்தாண்டில் டுவிட்டரில் அதிகப்படியான ரீ-டுவிட்டுகளை பெற்ற ஒரு பிரபலத்தின் டுவிட் என்ற சாதனையை விஜய்யின் செல்பி படைத்தது குறிப்பிடத்தக்கது.