வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:08 IST)

அஜித் & ஏ எல் விஜய் சந்திப்பு நடந்தது எப்போது? பேசியது என்ன?

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க உள்ளதாக புதிய தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப் பட்டு வருகிறது.

அஜித் இப்போது ஹெச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதை கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதிரடி மாற்றமாக அஜித்தின் அடுத்த படத்தை கிரீடம் படத்தை இயக்கிய ஏ எல் விஜய் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் முதல் படமாக அமைந்த கிரிடம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படி ஒரு செய்தி பரவுவதற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது. அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் முகாமிட்டு இருந்த போது தலைவி படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஏ எல் விஜய் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லியுள்ளாராம். அஜித்தும் அதைக் கேட்டுள்ளாராம். இந்த அளவில் மட்டுமே அந்த பேச்சுவார்த்தை இருந்ததாம். ஆனால் அதற்குள் அடுத்த படத்தை இயக்குவதே ஏ எல் விஜய்தான் என்பது போல செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.