ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 மார்ச் 2025 (15:03 IST)

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

Veera Dheera Sooran

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலைக்குள் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து தயாரான படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு பங்குதாரரான B4U நிறுவனம் படத்தை வெளியிட தடைக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கில் ரூ.7 கோடி டெபாசிட் கட்ட சொன்ன நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கான தடையை 4 வார காலத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 

 

ஏற்கனவே இந்த படம் பொங்கலுக்கு திட்டமிட்டு பல முறை தள்ளி வைக்கப்பட்டு இன்று கடைசியாக தியேட்டர்களை வந்து சேர்ந்துள்ளது. அதனால் இன்றே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு தொடர்ந்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அனைத்து பிரச்சினைகளையும் முடித்து இன்று மாலை 6 மணிக்கு வீர தீர சூரன் ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. என்ன முடிவு என்பது தெரியாமல் ரசிகர்களும் குழப்பத்தோடு திரையரங்குகள் முன்பு காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K