1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (10:00 IST)

மீண்டும் லீக் ஆன வாரிசு ஸ்டண்ட் காட்சி!? – அதிர்ச்சியில் படக்குழு!

Varisu
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் “வாரிசு”. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,ஷ்யாம், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

எதிர்வரும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. முன்னதாக விஜய் பிறந்தநாளின்போது வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின.

அதற்கு முன்பாக சில சமயங்களில் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது ஹார்பர் ஒன்றில் நடைபெறும் சண்டை காட்சி மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தீவிரமாக ஷேர் செய்து வருகின்றனர். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.