திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (21:28 IST)

10 கோடி பார்வையாளர்களை நெருங்கும் விஜய்யின் பாடல் !

10 கோடி பார்வையாளர்களை நெருங்கும் விஜய்யின் பாடல் !

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்.  இவரது நடிப்பில் கடந்த 2017  ஆம் ஆண்டு வெளியான மெர்ஷல் படத்தில் இடம்பெற்ற ஆளப் போறான் தமிழன் என்ற பாடல் தான் விஜய் பாடல்கள் அதிக பார்வையாளர்களைக் கடந்ததாக இருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்பாடல் இதுவரை 11 கோடியே 16 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்நிலையில், தெறி என்ற படத்தில் இடம்பெற்ற உன்னாலே ..என்ற பாடல் சுமார் 10 கோடி பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்பாடல் இதுவரை 9 கோடியே 24 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இப்பாடலுக்கு இசையமைத்தது ஜி.வி பிரகாஷ்குமார் ஆவார்.   மேலும், இப்பாடலுக்கு  ஹரிஹரன் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்கள் குரலால் உயிர்கொடுத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இப்பாடல் 10 கோடியை அடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.