சூர்யாவின் நடிப்பை பாராட்டிய விஜய்யின் உயிர்நண்பர்…
சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்த படம் சூரரைப் போற்று.
இப்படம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியொவில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சினிமாத்துறையினர் பலரும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரைத் தொலைக்காட்சியின் நடிகருமான சஞ்சய் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று படத்தில் நான் முழுவதுமாக விரும்புகிறேன். சூரியாவிடமிருந்து அற்புதமான நடிப்பாற்றல் வெளிப்பட்டுள்ளது. சுதா கொங்கரா சிறப்பாக இயக்கியுள்ளார். முழு டீமும் நன்றாக பணியாற்றியுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
இதற்கு பதிளித்த சூர்யா நன்றி மாமா என்று பதிலளித்துள்ளார்.