திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (14:17 IST)

தெலுங்கில் அறிமுகமாகும் விஜய்சேதுபதி பட இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
 
விஜய்சேதுபதி நடித்த பன்னையாரும் பத்மினியும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் தனது அற்புதமான இசையமைப்பால் குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்தார். அவரது இசையில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது.
 
இந்த நிலையில், அவர் அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், விஜய் தேவரகொண்டாவுக்கு இளம் ரசிகர்கள் அதிகம். அவரது படத்தின் மூலம் அறிமுகமாக நான் பாக்கியம் செய்துள்ளேன். இந்த படத்தின் இயக்குனர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். இவருடன் ஏற்கனவே குறும்படத்தில் வேலை செய்துள்ளேன் என்றார்.