1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (00:12 IST)

விஜய்யின்'' பீஸ்ட்'' பட டிரைலர் புதிய சாதனை ....

பீஸ்ட் படத்தின் டிரைலர்  6 மணி நேரத்தில் சுமார்  ஒன்றரைக் கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்துக்காக விஜய் ரசிகர்கள் செம ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி சற்று முன்னர் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. டிரைலரில் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படும் ஒரு மாலில் உலகின் திறமைமிக்க ஒரு உளவாளியும் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொள்ள அங்கு எப்படி விஜய் தீவிரவாதிகளை வென்று மக்களைக் காக்கிறார் என்பதை செம்ம மாஸாகா ஸ்டைலாக உருவாக்கியுள்ளனர். விஜய்யின் மாஸ் காட்சிகளும், அனிருத்தின் பின்னணி இசையும் டிரைலரின் ப்ளஸ் பாய்ண்ட்களாக அமைந்துள்ளன.

இ ந் நிலையில்  பீஸ்ட் டிரைலர் வெளியான  6 மணி நேரத்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சம் பார்வையாளர்களையும்,  2 மி ல்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன் கான் மீது பதிவாகியுள்ள போதை பொருள் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாதாகட் தகவல் வெளியாகிறது.