செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (11:42 IST)

சீனாவில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் விஜய்

சீனாவுக்குச் சுற்றுலா சென்றுள்ள விஜய், இன்று சென்னை திரும்புவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61வது படமான இதை, அட்லீ இயக்கியிருந்தார். விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தனர்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அவருடைய 62வது படமான இதை, சன்  பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.
 
எனவே, அதற்கு முன்னதாக குடும்பத்துடன் சீனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் விஜய். இதனால், மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திரக் கலைவிழா’வில் கூட அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த 4ஆம் தேதி  இரவு சீனா புறப்பட்டுச் சென்ற விஜய், இன்று சென்னை திரும்புவதாகத் தகவல் கிடைத்துள்ளது.