1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 10 ஜனவரி 2018 (11:41 IST)

மறுபடியும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது விஜய்யின் ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’, பொங்கலுக்கு மறுபடியும் ரிலீஸாக இருக்கிறது.
விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன்,  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
 
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த தீபாவளிக்கு ரிலீஸான இந்தப் படத்தை, வருகிற பொங்கலுக்கு மறுபடியும் சிறப்புக் காட்சியாக ரிலீஸ் செய்கிறது கோயம்பேட்டில் உள்ள ரோகிணி  திரையரங்கம். இதுவரை 500க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க முன்பதிவு செய்துள்ளனர்.