திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (00:55 IST)

வேறு வகையில் உதவி செய்கிறேன்: நடிகர் சங்க நிதி குறித்து விஜய்

நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட சமீபத்தில் மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. கமல், ரஜினி உள்பட கோலிவுட் திரையுலகிலகினர் மலேசியாவுக்கு திரண்டு சென்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

இந்த நிலையில் இந்த விழாவில் அஜித், விஜய், தனுஷ், சிம்பு, நயன்தாரா, த்ரிஷா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது நடிகர் சங்க நிர்வாகிகளை வருத்தமடைய செய்தது. இந்த நிலையில் நட்சத்திர விழா நடந்த அதே தேதியில் ஏற்கனவே சீனப்பயணம் திட்டமிடப்பட்டிருந்ததால் விஜய்யால் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை

இந்த நிலையில் விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக வேறு வகையில் உதவி செய்வதாக விஜய் உறுதி அளித்துள்ளாராம். விரைவில் விஜய் உள்பட ஒருசில பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றை நடிகர் சங்கம் நடத்தும் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.