செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (17:03 IST)

ரஜினிக்கே ரி எண்ட்ரி கொடுத்த இயக்குனர்… ஆனாலும் மறுத்த விஜய்!

இயக்குனர் பி வாசு சொன்ன கதையை நாசூக்காக மறுத்து விட்டாராம் நடிகர் விஜய்.

முன்னணி இயக்குனரான பி வாசு நீண்டகாலமாக விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டவர் பி வாசு. ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், அஜித் உள்ளிட்ட எல்லா முன்னணி நடிகர்களையும் இயக்கியவர்.

அதுமட்டுமில்லாமல் பாபா தோல்வியால் 3 ஆண்டுகளாக எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்த ரஜினிகாந்தை சந்திரமுகியில் நடிக்க வைத்து மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தவர் வாசு. ஆனால் அவர் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்காததால் நாசூக்காக மறுத்து விட்டாராம். சமீப காலமாக விஜய் இளம் இயக்குனர்களுடன் இணையவே அதிகமாக விரும்புகிறார் என சொல்லப் படுகிறது.