1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (16:13 IST)

ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மக்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

vijay makkal iyakkam
சென்னையில்  உள்ள ஆத்தரவற்றோர் இல்லத்தில் உள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கி உதவினர். 

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் உதவி   செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில்  வெள்ள நீர் சூழ்ந்துள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர் இல்லத்தில்  உள்ள 200க்கும் மேற்பட்டோருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கி உதவினர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, ‘’சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று    நடிகர் விஜய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.