1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (12:09 IST)

வேளச்சேரி மக்களுக்கு உதவி செய்த நயன்தாராவின் ’பெமி 9’ நிறுவனம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சென்னை வேளச்சேரி பகுதியில் வெள்ளம் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பாதிப்படைந்த மக்களுக்கு நடிகை நயன்தாரா தனது நிறுவனத்தின் சார்பாக  உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை பெருவெள்ளம் மற்றும் புயல் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வேளச்சேரி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் நயன்தாராவின் ’பெமி 9’ என்ற நிறுவனத்தின் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் உணவுப் பொருட்கள் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டன.  

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நயன்தாராவுக்கு பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நயன்தாரா போல் இன்னும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட  பகுதிக்கு சென்று உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.

Edited by Mahendran