வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (17:06 IST)

தவறைகளை திருத்திக்கொள்ளும் சாதாரண மனுஷன் தான் நானும் - வைரலாகும் விஜய் ட்வீட்!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது கத்தி படத்தின் போது கோலா விளம்பரத்தில் விஜய் நடித்தது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஜய்யின் ட்வீட் பதிவு இணையத்தில் தற்ப்போது வைரலாகி வருகிறது.


அதில் ரசிகர் ஒருவர் "கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு கத்தி படத்தில் அதற்கு எதிராக பேசுகிறீர்களே இதற்குப் பெயர்"? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய்,  "நான் இதை இப்போது செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.  நானும் தவறுகளை திருத்திக் கொள்ளும் சாதாரண மனுஷன். இனி இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். கத்தி பட கதை கேட்டபோதே எனக்குள் இந்த கேள்வி தோன்றியது. அதை நான்  ஜீவா கதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்தி என்னை நானே நிறுத்திக்கொண்டேன் என பொறுப்புணர்வுடன் பதில் அளித்துள்ளார்.