1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:47 IST)

ஏ ஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் விஜய் 67 பட ஷூட்டிங்!

ஜனவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்குனர் லோகேஷ் காஷ்மீரில் படமாக்க உள்ளாராம். இதற்காக 50 நாட்கள் அங்கு தங்கி விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த காட்சிகளை படமாக்கும் முன்னர் சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ மற்றும் ஏ ஆர் ரஹ்மானின் ஸ்டுடியோ ஆகிய இடங்களில் பாடல் காட்சிகள் சிலவற்றை படமாக்க உள்ளார்களாம்.