வாரிசு ரிலீஸுக்கு பின்னர்தான் ‘தளபதி 67’ அப்டேட்- லோகேஷ் கனகராஜ் தகவல்!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 ஷூட்டிங் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சமீபத்தில் வாரிசு படத்தை முடித்த நிலையில் இப்போது இந்த படத்தில் கவனம் செலுத்த உள்ளார். இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, விஷாலிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஷால் அந்த படத்தில் நடிக்கவில்லை என அறிவித்துள்ளார். லத்தி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் “எனக்கு அடுத்தடுத்து நிறைய படங்கள் உள்ளன. அதனால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நான் விஜய் படத்தை இயக்க முயற்சிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் லத்தி படத்தின் ட்ரைலர் வெளியீட்டில் கலந்துகொண்ட லோகேஷிடம் தளபதி 67 படத்தின் அப்டேட் பற்றி கேட்ட போது “வாரிசு படம் ரிலீஸ் ஆன பின்னர்தான் தளபதி 67 அப்டேட் வெளியாகும். அப்போது உங்களுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு அப்டேட் தருவோம்” எனக் கூறியுள்ளார். மேலும் ஷூட்டிங் ஜனவரி மாதத்தில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.