1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:50 IST)

ரஜினி பட வாய்ப்புக் கிடைக்க விஜய்யும் ஒரு காரணம் ... நெல்சன் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்!

பீஸ்ட் படத்தை இயக்கியுள்ள நெல்சன் அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது பீஸ்ட் படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் நெல்சன் ரஜினி பட வாய்ப்புக் கிடைத்தது குறித்து விஜய் என்ன சொன்னார் என்பதைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் ‘விஜய் சார் பீஸ்ட் பட ஷூட் அப்போ என்னை ரஜினி சார் படத்துக்காக முயற்சி பண்ண சொல்லி மோட்டிவேட் பண்ணார். நீங்க கதை ரெடி பண்ணுங்க, இந்த படம் முடியறதுக்கும் ரஜினி சார் படம் தொடங்குறதுக்கும் சரியா இருக்கும்’ எனக் கூறினார்’ எனக் கூறியுள்ளார்.