வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (14:21 IST)

செல்வராகவனின் அறிமுகப்படமாக அமையப்போவது எது? பீஸ்ட் or சாணிக்காயிதம்!

இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் இப்போது அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக்காயிதம் படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்க உள்ளார் என்ற அறிவுப்பு வெளியானபோதே ரசிகர்கள் பலரும் ஆச்சர்யமடைந்தனர். இதையடுத்து அந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸூக்கு தயாராக உள்ளது.  இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஏப்ரல் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் அது சம்மந்தமான ப்ரமோஷன் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் செல்வராகவன் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் செல்வராகவன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ஏப்ரல் 8 ஆம் தேதி சாணிக்காயிதம் வெளியாகவில்லை என்றால் பீஸ்ட்தான் செல்வராகவனின் முதல் படமாக வெளியாகும்.