1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (17:27 IST)

விஜய் 2-வது நாளாக 'மக்கள் இயக்க ' நிர்வாகிகளுடன் சந்திப்பு

vijay
நடிகர் விஜய்,   ‘மக்கள் இயக்க’ நிர்வாகிகளுடன்  நேற்று சென்னை, பனையூரில் உள்ள மக்கள் இயக்கம் அலுவலகத்தில்  ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி,   நேற்று பனையூரில் உள்ள மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்திருந்த நிலையில்,  மதியம் நடிகர் விஜய் அலுவலகத்திற்கு வந்து, சமீபத்தில் நடைபெற்ற  கல்வி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த  நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில்,  இன்று 2 வது நாளாக மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த  ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டு சிலர் வெற்றி பெற்ற நிலையில், விஜய் நடத்திய கல்வி விழா அவரது அரசியல் பயணத்தின் தொடக்கம் எனப் பேச்சுகள் எழுந்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.  

சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில், இன்று, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை விஜய் சந்தித்துப் பேச  விஜய் தன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகிறது.