திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:46 IST)

மீண்டும் சர்ச்சை போஸ்டரை ஒட்டிய விஜய் ரசிகர்கள்!

சென்னையின் சில பகுதிகளில் விஜய்யை எம் ஜி ஆர் போல சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக விஜய்யை முன்னாள் முதல்வர்கள் போலவும், மகான்கள் போலவும் வடிவமைத்து போஸ்டர்கள் ஒட்டுவது வழக்கம். கடந்தவாரம் விஜய்யை எம் ஜி ஆர் போலவும், அவர் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் வடிவமைத்த போஸ்டர் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் இப்போது விஜய்யை விவேகானந்தர் போல வடிவமைத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர் மதுரை விஜய் ரசிகர்கள்.

அதில் ‘நாடு நலம் பெற 100 இளைஞர்கள் வேண்டும் என்றார் விவேகானந்தர்; தளபதி! உன்னிடம் இருப்பதோ பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள்" எனக் ‌குறிப்பிட்டதுடன் 'விவேகானந்தரின் விஜயமே வருக.. நல்லாட்சி தருக..'  என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது. அந்த போஸ்டர்கள் உண்டாக்கிய சர்ச்சைகள் மறைவதற்குள்ளாகவே இப்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர் சென்னை விஜய் ரசிகர்கள்.

இந்த முறை விஜய்யை எம் ஜி ஆர் போல சித்தரித்து ‘மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்?” என்ற வாசகங்களோடு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.