செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:33 IST)

லோகேஷ் யூனிவர்சில் இடம்பெறணும்… பிரபல பாலிவுட் இயக்குனர் விருப்பம்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெருமளவில் வரவேற்பைப் பெற்றன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் சில கதாபாத்திரங்களை கிராஸ் ஓவர் செய்திருந்தார் அவர். அது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்க பலரும் அவரது படங்களை “லோகேஷ் யூனிவர்ஸ்” என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் இந்த இரு படங்களையும் பார்த்து வியந்துள்ளார். இந்த இரண்டு படங்களும் தனக்கு பிடித்திருந்ததாகவும் “லோகேஷின் யூனிவர்ஸில் தானும் இருக்க” ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனால் லோகேஷ் கைதி 2 எடுத்தால் அதில் அனுராக் காஷ்யப் இடம்பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.