1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2023 (07:39 IST)

லியோ படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வது யார்?... வெளியான தகவல்!

லோகேஷ் இயக்கும் விஜய்யின் லியோ படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பிஸ்னஸை தயாரிப்பாளர் லலித் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் அடுத்து நடிக்கும் ‘தளபதி 68’ படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.