1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vijay 68 movie release plans major change

விஜய்யின் தளபதி 68 படத்தின் ரிலீஸில் நடந்துள்ள மாற்றம்!

விஜய்
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் ஷுட்டிங்கை இன்றோடு முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என முதலில் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தின் ரிலீஸ் மேலும் சில மாதங்கள் தள்ளி அடுத்த ஆண்டு அக்டோபரில்தான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிய தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!