திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (15:07 IST)

இதை எங்களால் ஏத்துக்கவே முடியாது தளபதி... விஜய்யின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தற்போது மாஸ் ஹீரோவாக உச்ச நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். 
 
தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
 
இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட்டு அத்தோடு தனது சினிமா தொழிலை ஏறக்கட்டிவிட்டு அரசியலில் இறங்கவுள்ளாராம். அரசியலில் இறங்கி 3 ஆண்டுகள் பிறகு சினிமாவில் நடிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.