1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (11:58 IST)

விஜய்-விஷால் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

தளபதி விஜய் மற்றும் புரட்சித்தளபதி விஷால் ஆகிய இருவரும் இன்று சந்தித்துள்ள செய்தி இரு தரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடித்துள்ள ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த டீசரை விஜய்யிடம் காண்பித்து விஷால் உட்பட ’மார்க் ஆண்டனி படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த சந்திப்பின்போது விஜய்க்காக இரண்டு கதைகள் தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதில் அவர் நடிக்க வேண்டும் என்றும் விஷால் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட விஜய், ‘கதை தயாரானதும் கூறுங்கள் கண்டிப்பாக நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று விஜய் உறுதி அளித்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை   ’மார்க் ஆண்டனி’    திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ’மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், டிஎஸ்ஜி, ரிதுவர்மா,  உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

Edited by Mahendran