திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (18:18 IST)

ஆராரிராரிரோ கேட்குதம்மா... திடீரென அம்மாவை சந்தித்த காரணம் இது தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது தாய் தந்தையுடன் பேசாமல் மூன்றாவது மனுஷர்களை போல கொஞ்சம் தள்ளியே பழகி வந்தார். அதற்கெல்லாம் காரணம், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியது தான். 
 
இது விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். இதனால் அப்பா என்று கூட பார்க்காமல்,   அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். 
 
இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதரவு அளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.
 
இந்நிலையில் நேற்று விஜய் திடீரென அவரின் அம்மாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த சந்திப்பின் காரணம், அப்பா - அம்மாவின் 50ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காக தானாம். ஆனால், அந்த சந்திப்பில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், மற்றும் மனைவி , குழந்தைகள் என யாரும் இல்லை என்பது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.